பொன்சேகாவின் மேன்முறையீ்டு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் நடத்த உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
வெள்ளைக்கொடி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்றாண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரி, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு, இன்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக, நிமல் காமினி அமரதுங்க, பீ.ஏ. ரட்னாயக்க, சத்தியா ஹெட்டியா, பிரியாசாத் டெப் ஆகிய ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, சரத் பொன்சேகா சார்பில் ஆரஜரான சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி,
இந்த மேன்முறையீடு தொடர்பான ஆவணங்களை, ஆராய்வதற்காக, அவகாசம் தேவையென தெரிவித்தார். இதன் பிரகாரம் வழக்கை மே மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, நீதிபதிகள் தீர்மானித்தனர்.
அத்துடன் சரத் பொன்சேகாவினால் சமர்ப்பிக்கப்ட்ட இரண்டு ஆவணங்களையும், அவரது வழக்கறிஞசர் நீதிமன்றத்தில் முன்வைத்தார். இந்த ஆவணங்கள் தொடர்பான விளக்கங்களை அடுத்த அமர்வின்போது முன்வைக்குமாறு நீதிமன்றம், சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டது..
0 comments :
Post a Comment