முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி வெள்ளை மாளிகையில் பயிற்சிக்காக வந்த 19 வயது பெண்ணுடன் உறவு கொண்டார் என்று அந்தப் பெண் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜான் எப் கென்னடி அமெரிக்க அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகையின் பிரஸ் அலுவலகத்தில் பயிற்சி பெற வந்தவர் மிமி ஆல்போர்ட்(69). அப்போது அவருக்கு வயது 19. அவர் முன்னாள் அதிபர் கென்னடியுடன் தனக்கிருந்த ரகசிய உறவு குறித்து ஒரு புத்தம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் வெள்ளை மாளிகையில் பயிற்சிக்கு சென்ற 4வது நாளே அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வருமாறு என்னை கென்னடி அழைத்தார். அதன் பிறகு கென்னடியின் நெருங்கியநண்பர் டேவ் பவர்ஸ் என்னை ஒரு பார்ட்டிக்கு அழைத்தார். கென்னடி நிறைய குடித்துவிட்டு எனக்கு வெள்ளை மாளிகையை சுற்றிக்காண்பித்தார். அப்போது அவர் தனது மனைவியின் அறைக்கு அழைத்துச் சென்று எனக்கு மிக அருகில் வந்தார்.
பின்னர் என்னுடன் உறவு கொண்டார். நீ இதற்கு முன்பு உறவு கொண்டுள்ளாயா என்று அவர் என்னிடம் கேட்டார். இல்லை என்று சொல்ல வந்த நான் பிறகு ஆமாம் என்று கூறினேன். உறவுக்குப் பிறகு அவர் ஆடையை அணிந்து கொண்டு ஒரு அறைக்கு சென்றுவிட்டார்.
நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் அவரோ மிகவும் சகஜமாக இருந்தார். அன்று வீட்டுக்கு செல்லும் வழியெல்லாம் இனி நான் கன்னியில்லை என்பது தான் என் நினைவுக்கு வந்தது.
மறுவாரம் நான் மீண்டும் அவருடன் நீச்சல் குளத்திற்கு சென்றேன். அதன் பிறகு ஒரு அறைக்கு சென்று உறவு வைத்தோம். அன்றில் இருந்து 18 மாதங்கள் எங்களுக்கு இடையே ரகசிய உறவு இருந்தது. அவர் அதிபர் என்பதால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. நாட்டின் மிகவும் முக்கியமான நபர் என் மீது ஆசைப்படுகிறார் என்ற எண்ணத்தால் என்னால் அவரை ஒதுக்க முடியவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது தவிர அப்போது 45 வயதான கென்னடி மிமியை தனது நண்பருடன் உறவு கொள்ளச் சொல்லி வேறு அதையும் பார்த்தாரம். மிமிக்கு அமில் நைட்ரேட் என்னும் போதைப் பொருளைக் கொடுத்துள்ளார். அதை உட்கொண்டால் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment