Wednesday, February 1, 2012

பறவை காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லையாம்

பிங்கிரிய பகுதியிலுள்ள கோழி பண்ணையொன்றில் கோழிகள் உயிரிழந்தமைக்கு H5N1 எனப்படும் வைரஸே காரணம் எனவும், இதன் காரணமாக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கால்நடை உற்பத்தி திணைக்களப் பணிப்பாளர் வைத்தியர் குமார த சில்வா தெரிவித்துள்ளார்.

கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கால்நடை உற்பத்தி திணைக்களம் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகள் லண்டனில் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment