Wednesday, February 8, 2012

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் 'ஈவிரக்கமற்ற' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'ருத்லஸ்' எனும் ஆவணப்படம் இன்று (பெப்.08) காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் உத்தியோக பூர்வமாக திரையிடப்பட்டது.

இவ் ஆவணப் படமானது தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பாவி பொதுமக்கள் உட்பட அதன் உறுப்பினர்களுக்கு இளைக்கப்பட்ட கொடூர செயற்பாடுகள் ஆதாரத்துடன் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன. புலிகளின் எண்ணிலடங்காத கொடூர தன்மைகளில் சிலவற்றையே உலகம் அறிந்திருந்தது இவ் ஆவணப் படம் மூலம் மேலும் பல உண்மை ஆதாரங்கள் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது

மேலும் இது, இலங்கையின் உண்மை நிலை பற்றி அறியாமல் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் இவ் ஆவணப் படமானது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாக செயற்பட்டு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள முன்னால் புலி உறுப்பினர்களின் சுதந்திரமான உண்மை வாக்குமூலங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படத்தில் ஒரு காட்சியில் சிறுமி ஒருத்தி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு அவள் தப்பிக்க முயற்சித்தபோது தனக்கு நேர்ந்த கதி தொடர்பான அனுபவங்கள் மனதை உருக்குவனவாக உள்ளன.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com