Thursday, February 9, 2012

பூசாரிகள், பிக்குகள் மீது பாயும் சட்டம் மௌலவிகள் மீது ஏன் பாய்வதில்லை?

எல்லா மதங்களும் அன்பு தான் கடவுள் என்று சொல்கின்றன. ஆனால் மதங்கள் மக்களை வன்முறைக்கு தூண்டும்போது அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை அவை தாமாகவே தோற்றுவித்து விடுகின்றன.

கடந்த மூன்றாம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றின் கைதிகள் கூண்டினுள் கைதி ஒருவர் இறந்ததும், அம்மரணத்தை தொடர்ந்து கண்டனப்பேரணி எனும் பெயரில் மக்களை வன்செயலில் இறக்கியமையுமானது, இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ள சூழலிலும் பள்ளிவாயல்கள் தொடர்ந்தும் தமது கடந்த காலச் செயற்பாடுகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தயாராக இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பள்ளிவாயல்கள் தர்மத்தையும் , சமாதான மார்க்கத்தையும் போதித்து வன்செயல் வழியில் செல்கின்ற மக்களை நல்வழிக்கு கொண்டுவர முயற்சிக்கவேண்டிய கடமையிலிருந்து தவறி மக்களை வன்செயலுக்கு தூண்டிய அல்லது கண்டும் காணால் இருந்த சம்பவங்கள் ஏராளம் உண்டு.

அவ்வாறானதோர் கசப்பான நிகழ்வே கடந்த 3ம் திகதியும் இடம்பெற்றுள்ளது. மேற்படி மரணம் தொடர்பில் எவ்வித விளக்கமும் இன்றி இறந்தவர் வெறுமனே ஒரு இஸ்லாமியர் என்பதற்காக ஒட்டுமொத்த நாட்டினதும் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும் நிகழ்வு ஒன்றை ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் குவித்து தடுத்து நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இலங்கையின் சுதந்திர தினக்கொண்டாட்ங்களுக்காக முழு இலங்கையும் தயாராகிக்கொண்டிருக்கின்ற தருணத்தில் போதைவஸ்து குற்றவாளி ஒருவர் சார்பாக ஒட்டுமொத்த சமூகமும் தெருவில் இறங்கி போராட்டம் மேற்கொண்டுள்ளது. இப்போராட்டத்திற்கான ஏற்பாடுகள் கலந்துரையாடல்கள் யாவும் பள்ளிவாயலிலேயே இடம்பெற்றுள்ளது.

ஓரு போதைவஸ்து குற்றவாளி 3ம் திகதி காலை கைது செய்யப்படுகின்றான், இரண்டு மணித்தியாலய நேரத்தில் அவனை பொலிஸார் நிதிமன்ற கைதிகள் கூண்டினுள் வைக்கின்றனர், 11 மணிக்கு அவனை நீதிமன்று அழைத்தபோது, அவன் அவ்வறையில் இறந்து காணப்படுகின்றான், நீதிபதி மரண பரிசோதனைக்கு உத்தரவிடுகின்றார். உடலம் மட்டு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது, அங்கு இடம்பெற்ற பரிசோதனைகளில் தெளிவின்மையால் மேலதிக சோதனைக்காக கொழும்பு அனுப்பபடவுள்ளதாக செய்தி.

இந்நிலையில் இதன் உண்மைநிலை அறியாது , இறந்தவன் ஓர் இஸ்லாமியன் என்பதற்காக முழு நாட்டுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், நாட்டின் அமைதியை குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் எதற்கு?

உண்மையிலேயே இக்கைதி கடந்த 03ம் தினதி அட்டாளைச் சேனையில் வைத்து காலை 8மணிக்கு 8 கிராம் கஞ்சாவுடன் பொலிஸார் கைது செய்தனர்.

ஆனால் மரண பிரதே பரிசோதனை தொடர்பான எவ்வித முடிவும் கிடைக்கப்பெறுவதற்கு முன்னர் பள்ளிவாயல் அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் ஆர்பாட்டம் தூண்டுவதென்பது மிகவும் பாரிய குற்றமாகும். அதுவும் இலங்கைத்தாய் தனது 64 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது இவர்கள் ஆர்பாட்டம் செய்வதென்பது தாய் நாட்டின் மீது இவர்கள் எந்தளவு பற்று வைத்துள்ளனர் என்பதை நமக்கு காட்டுகின்றது.

இவர்கள் ஆர்பாட்டம் நடாத்தியதற்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் ஆயினும் பாரியளவில் அரசாங்கம் எதனையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறானதோர் ஆர்ப்பாட்டத்திற்கு இந்து ஆலயம் ஒன்றிலிருந்து , அல்லது பௌத்த கோலில் ஒன்றிலிருந்து தூபமிடப்பட்டிருந்தால் பூசாரி அல்லது பிக்குவின் நிலை என்னவாகியிருக்கும்?

குறிப்பாக முஸ்லீம்கள் என்றவுடன் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்களும் மௌனமாக இருந்ததென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் எப்பகுதியில் வசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் இந்த நாட்டின் குடி மக்கள் அவர்கள் நாட்டிற்கு எதிராக குற்றங்களை செய்யும்போது அவர்களை தண்டிக்கப்படவேண்டும் என்பது தான் இந்த நாட்டின் சட்டமும் எமது ஜனாதிபதியின் எண்ணமாகவும் உள்ளது.

எனவே இந்த நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட பள்ளி நிர்வாகம் மக்களை தூண்டியுள்ளது. விடுதலைப்புலிகள் எப்படி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாட்டார்களே அதே போல் முஸ்லீம் மக்களும் இப்போது அரசிற்கு எதிரக செயற்படத் தொடங்கி விட்டனர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதோடு வன்செயல்கள் பள்ளிவாயல்களிலிருந்தே ஊற்றெடுக்கின்றது என்ற கசப்பான உண்மையை இச்சம்பவம் புலப்படுத்துகின்றது.

எனவே இப்பள்ளி நிர்வாகங்களையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் மௌலவிகள் யாவரையும் தேவைப்படும் போது விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போது தான் பள்ளிகள் எதிர்காலத்தில் மக்களை வன்முறைக்கு தூண்டாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

உண்மையிலேயே இவ்வார்ப்பாட்டம் நடாத்த பள்ளி நிர்வாகம் மக்களை பணித்ததன் பின்னனி என்ன? அதாவது கஞ்சா போன்ற போதைப்பொருட்களை சமூகத்திலிருந்து ஒளிக்க கூடாது என்பதா? இல்லை போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களையும் அதனை நுகர்வோரையும் கைது செய்து தண்டிக்க கூடாது என்பதா? ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை தூண்டியதன் மூலம் இவற்றிற்கும் தமக்கு தொடர்பு உள்ளது என்று அரசாங்கத்திற்கு சூசகமான பதில் சொல்லப்பட்டுள்ளதா? உண்மையிலேயே பொலிஸார் தான் கொலைக்கு காரணம் என்றால் அதை மருத்துவ அறிக்கை சொல்லிய பின்னர் சட்டம் மூலம் நடடிவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.

அத்தோடு இந்நாட்டிற்கு எதிராக செயற்படுகின்ற எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் பக்க சார்பாகவே செயற்பட்டுள்ளதை காண முடிகின்றது. எனவே எதிர்காலத்தில் எந்த விதமான சார்புகளும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவதோடு மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற எண்ணத்தை தோற்றிவிக்க வேண்டும்.

கடந்தகால வரலாற்றை எடுத்துப்பார்ப்போமானால் கிழக்கில் தமிழ் மக்கள் மீது முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் யாவும் பள்ளிவாயல் தொழுகை முடிந்தபின்பே ஆரம்பமாகியுள்ளது. சில சமயங்களில், வெள்ளிக்கிழமை 12 மணியிலிருந்து 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தினுள் தமிழ் மக்கள் முஸ்லிம் கிராமங்களினுள் நுழைவதில்லை காரணம், தொழுகையின் பின்னர் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற அச்சத்தில் மக்கள் இருப்பர்.

இவ்வாறு பழைய நினைவுகளை மீட்டுவது எந்தவொரு தீய நோக்குடனும் கிடையாது. ஆனால் பள்ளிவாயல்கள் வன்செயலை தூண்டும் இடமாக தொடர்ந்து அமையக்கூடாது என்பதை கூறுவதற்கேயாகும்.

எனவே மேலும் ஒருமுறை இவ்வாறனதோர் நியாயத்திற்கு அப்பாற்பட்ட நிலைமையை பள்ளிவாயலிலிருந்து ஊற்றெடுக்காமல் இருக்க சகலரும் தமது கண்களை திறந்து வைத்துக்கொள்வது சாலவும் சிறந்தது.

No comments:

Post a Comment