அழுகிய நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் ஒன்று கிரான்ட்பாஸ் – பாலத்துறை ,எப்பல்வத்த பகுதியில் கால்வாய் ஒன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி மக்கள் கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர். இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் மரணவிசாரணை அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சடலத்தின் தலைப்பகுதி முற்றாக உருக்குலைந்து காணப்பட்டதுடன், உடலின் பாகங்கள் வீங்கிய நிலையில் நிறம்மாறி காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment