நாட்டிலுள்ள பிச்சைக்காரர்களை சமூக மயப்படுத்த சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கை
நாட்டிலுள்ள பிச்சைக்காரர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதோடு அவர்களை சமூகமயப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொள்ள சமூக சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது நகரப் பகுதிகளிலேயே அதிகளவான பிச்சைச்காரர்கள் வாழ்ந்துவருகின்றனர் என சமூகசேவைகள் அமைச்சு தெரிவிப்பதோடு அவர்களில் எத்தனை பேர் உண்மையான பிச்சைக்காரர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது அமைச்சன் செயலாளர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் சமூக சேவைகள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
கணக்கெடுப்பின் பின்னர் அவர்களைச் சமூகமயப்படுத்தும் விரிவான திட்ட மொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment