அரசாங்கம் எக்காரணம் கொண்டும் விருப்பத்துடன் மக்கள் மீது சுமைகளை சுமத்த, தயாரில்லை எனவும் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையூடாக, சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படுமெனவும் , ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மஹர பிரதேசத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பல அபிலிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில்,
சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய பெற்றோல் உற்பத்தி நாடுகளின் தூதரகங்களும் இலங்கையில் உள்ளன. இந்நாடுகளின் தூதரகங்களுக்கும் நாமே, எரிபொருள் வழங்குகிறோம். நாம் எரிபொருளுக்கு மானிய உதவி வழங்கும்போது, வறிய மக்களும் அனுபவிக்கின்றனர். இதில், மாற்றமொன்றை ஏற்படுத்துவதே, எமது நோக்கமாக அமைந்தது. தேவையானவர்களுக்கு நாம் நிவாரணம் வழங்குவோம்.
சமூர்த்தி உதவி பெறுவோர் உள்ளிட்ட தேவையான அனைவருக்கும் நிவாரணம் வழங்குhறு, நான் பணிப்புரை வழங்கியுள்ளேன். இது தொடர்பில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை. இது, தற்காலிகமான ஒரு நிலையே. எந்த அரசாங்கம், அதிகரித்ததன் பின்னர் குறைத்தது. எமது அரசாங்கமே, இதனையும் புரிந்து காட்டியது. நாம் இதனை ஒருபோதும் விருப்பத்துடன் புரியவில்லை.
நாட்டை ஆட்சி செய்யும்போது, எமக்கும் ஒரு சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதனால், மக்களை வீதிகளில் இறக்கி, சொத்துகளை சேதப்படுத்தி, மக்கள் ஆணையினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தை, பதவி கவிழ்க்க செய்வோம் என்ற நோக்குடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
ஜனாதிபதியினை மாற்றியமைத்தால், சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைககுமென, இவர்கள் கூறுகின்றார்கள். பொது மக்கள், அவசியமற்றது என்று தீர்மானிக்கும் பட்சத்தில், நான் என்றும் செல்ல தயாராகவுள்ளேன். மக்கள் எனக்கு வழங்கியுள்ள பொறுப்பினை நிறைவேற்றியதன் பின்னரே, நான் செல்வேன். சூழ்ச்சிக்காரர்கள், ஒரு சில அரச சர்ர்ப்பற்ற அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு, நாட்டை தாரை வார்க்க, நாம் எக்காரணம் கொண்டும் தயாரில்லை.
பெப்ரவரி மார்ச் மாதங்களிலேயே, இதற்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றனர். ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை மீது நெருக்கடிகளை தோற்றுவிப்பதே, இவர்களது நோக்கமாகும். நாடு தொடர்பில் எமக்கு பாரிய பொறுப்பு உள்ளது. நாம் இறந்து விடுவோம். இருப்பினும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு தேசம் அவசியம். இந்த நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் எதிர்கால சந்ததியினருக்கு, சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழக்கூடியே தேசமொன்றை கட்டியெழுப்பக்கூடிய பொறுப்பையே, எனக்கு வழங்கியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் வழங்கிய பொறுப்பினை, உரியவாறு, பின்நிற்காது நிறைவேற்றுவேன்.
உலக சந்தையின் நிலைமைகள் தொடர்பில் பொது மக்கள் தெளிவான விளக்கத்துடன் இருக்கின்றனர். ஒரு சிலர், எரிபொருளை கேடயமாகக் கொண்டு, நாட்டில் நெருக்கடி நிலைமைகளை தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதே, இவர்களது நோக்கமாகவுள்ளது. எந்த நிலைமைகளை சந்தித்த போதிலும், முழு நாட்டு மக்களும் மகிழ்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ்வதற்காக, அரசாங்கம் உயரிய உதவிகளை வழங்கும்.
ஜனாதிபதியின் மக்கள் பணியினை பாராட்டி, விசேட கௌரவ விருது, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்னவினால் வழங்கப்பட்டது. வடகொழும்பிற்கு நீர் வழங்கும் செயற்திட்டம், அதனை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டது. இதற்கென, 3 ஆயிரத்து 843 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகத்தையும், திறந்து வைத்து ஜனாதிபதி, அலுவலக வளாகத்தில் மரமொன்றையும் நாட்டி வைத்தார்.
கடவத்த பஸ் தரிப்பு நிலையம், மஹர ஷகெமிதிரிய| கூட்டுறவு சங்கம், உடற்பயிற்சி பூங்கா மற்றும் கடவத்த சுரங்க வீதியும், திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, ரண்முத்துகல விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மறைந்த பத்தேகம விமலவன்ச மற்றும் ஜப்பானின் நாரகன்கோதி ரஜமஹா விஹாராதிபதி சங்கைக்குரிய கையேங் துஷிகிமுரா ஆகியோரை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட உருவச்சிலையையும் திறந்து வைத்தார்.
சங்கைக்குரிய சீலகம விமலரதன தேரர் உள்ளிட்ட தேரர்கள், ஜனாதிபதியை ஆசிர்வதித்ததுடன், தேரர்களுடன் சிநேகபூர்வமாக ஜனாதிபதி உரையாடினார். அமைச்சர்கள் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிடோ ஹொபோ ஆகியோரும், இந்நிகழ்வுகளில் இணைந்திருந்தனர்.
No comments:
Post a Comment