ஆப்கானிஸ்தானிடம் மன்னிப்புக்கோரியது அமெரிக்கா!
நேட்டோ படைகளினால் கடந்த திங்களன்று கைப்பற்றப்பட்ட இஸ்லாமிய ஆவணங்கள் அப்படையினரால் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இது தொடர்பான விசாரணை அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெறுமென நேட்டோ படைகளுக்கான அமெரிக்க தலைவர் ஜெனரல் ஜோன் ஆர் எலன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நேட்டோ படைகளால் அல்குர்ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பென்டா, அமெரிக்க படைகள் அனைத்து சமயங்களையும் மதித்து செயல்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment