Thursday, February 2, 2012

கடற்கொள்ளைக்காரர்களினால் கைது செய்யப்- பட்டுள்ள மீனவர்கள் தொடர்பில் புதிய நிபந்தனை

சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமாயின் தாங்கள் கோரியுள்ள 6 மில்லியன் டொலர் பணத்தில் அரைப்பங்கையாவது தர வேண்டுமென்று கடற்கொள்ளையர்களினால் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் கோரியுள்ள கப்பப்பணத்தை நாளை வெள்ளிக்கிழமைக்குள் தராவிட்டால் மீனவர்கள் ஆறு பேரையும் கொலை செய்யப்போவதாக இதற்கு முன்னர் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, இன்று முற்பகல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் மலேசியாவிலிருந்து செயற்படும் குழுவினர் தொலைபேசியூடாக புதிய நிபந்தனையை தெரிவித்தள்ளனர் .

எஸ்.கே .கே.வீரசிறி , வர்ணகுலசூரிய சாந்த செபஸ்தியன் , தினேஷ் சுசந்த பெர்னாந்து , ஜுட் நிசாந்த பெர்னாந்து , வர்ணகுலசூரிய ஜேசுதாஸ் லியோன் ரொட்ரிகோ ஆகியோரே சோமாலிய கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

. இவர்கள் அறுவரும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி நிமேஷ் தூவ என்ற பெயரில் பொறிக்கப்பட்ட டோலர் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் எரிபொருள் தீர்ந்ததன் காரணமாக சர்வதேச கடற்பகுதிக்குள் இவர்கள் பயணித்த ரோலர் படகு சென்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் படகின் உரிமையாளருக்கு அறிவித்திருந்த நிலையிலேயே சோமாலிய கடற்கொள்ளைகாரர்களினால் பிடிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமாள் செல்வராஜனின் மனைவி கமலா செல்வராஜன் தெரிவிக்கையில்,

நாங்கள் பிட்டிபனை ,இரண்டாம் தூபபத்தையில் வசிக்கின்றோம். எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர்.எனது கணவர் உட்பட ஏனையவர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்களினால் பிடிக்கப்பட்ட பின்னர் தொலைபேசியூடாக அவர்கள் பல தடவைகள் தொடர்பு கொண்டுபேசினர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்க வேண்டாம் என்று அவர்கள் எம்மிடம் தெரிவித்திருந்தனர். 6 மில்லியன் டொலர் பணத்தை கப்பமாக கேட்டு நாளை வெள்ளிக்கிழமை வரை அவர்கள் காலக்கெடு விடுத்தனர். மலேசியாவில் உள்ள அவர்களது பிரதிநிதிகளே இது தொடர்பாக எங்களுடன் தொடர்பு கொண்டு பேசுவர்.

இதற்கு முன்னரும் இலங்கை மீனவர்களை தாங்கள் பிடித்து வைத்திருந்ததாகவும் கப்பப் பணம் பெற்றுக்கொண்டே அவர்களை விடுவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர் .

பணம் பெற்றுக் கொள்ளாமல் விடுவிக்கப்போவதில்லை எனவும் , தாங்கள் கோரியுள்ள பணத்தில் அரைவாசியையாவது வழங்க இலங்கை அரசாங்கத்துடன் கதைத்து நடவடிக்கை எடுக்குமாறும் இன்று அவர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட ஆறு மீனவர்களினதும் உறவினர்கள் ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.

கடத்தப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்



ஜுட்நிசாந்த



லியான் ரொட்ரிகோ



லியான் ரொட்ரிகோவின் மகள்



பெருமாள் செல்வராஜா



பெருமாள் செல்வராஜா குடும்பத்தினர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com