ஜீ.எல் ஜெனீவா பயணமானார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரஸ் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜெனீவாவிற்கு பயணமானார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
தனது பயணம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர், இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயல்த்திட்டங்களை சர்வதேசத்திற்கு தெளிவுப்படுத்துவதே இப்பேரவையில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளின் நோக்கம் எனவும் இலங்கைக்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சில நாடுகள் எல்ரிரிஈ அமைப்பிற்கு சார்பாக செயல்படுகின்றன எனவும், இது போன்ற நாடுகள் மற்றும் அமைப்புக்களால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையென, இப்பேரவையில நிருபிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment