Wednesday, February 22, 2012

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவும் எரிபொருள் விலையேற்றமும்

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக் குழுவும் எரிபொருள் விலை அதிகரிப்பும் என்ற தொனிப்பொருளில் பகிரங்க கருத்தரங்கு ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (25) நீர்கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு நீர்கொழும்பு தம்மிட்ட கார்தினல் குரே நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது .

இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன , ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் , சுதந்திரத்துக்கான அரங்கம் அமைப்பின் முக்கியஸ்தர்களான பிரிட்டோ பெர்னாந்து , சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனமற்றம் சட்டத்தரணி கே.டப்ளியூ ஜனரஞசன, ஹேர்மன் குரேரா, பிரபல சிங்கள பாடகர் ஜயதிலக பண்டார ஆகியோர் பங்குபற்றி உரையாற்றவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com