Friday, February 3, 2012

வடகிழக்கில் நிலைகொண்டுள்ள தென்பகுதி மீனவர்களை மீளப்பெற இணக்கம். லக்பிம

தென் பிராந்தியத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீன் பிடித்தொழில்களில் ஈடுபடும் மீனவர்களை எதிர் வரும் ஏப்ரல் மாதத்துடன் மீளத் தம் பிரதேசங்களுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து கடற்தொழிலாளர் அமைப்புக்களின் தலைவர் என்டன் விஜேந்திர தெரிவித்துதள்ளதாக லக்பிம பத்திரிகை தெரிவிக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிநாட்டு அமைச்சர் மற்றும் முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆகியோ இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னணியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

வடகிழக்கில் சிங்களக்குடியேற்றம் என தமிழர் தரப்பினர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு குறிப்பிட்ட மீனவர்களின் விவகாரங்கள் வழிவிடுவதாகவும், வடகிழக்கு மீனவர்களின் தொழிலுக்கு தென்பகுதி மீனவர்களின் பிரசன்னம் பாதிப்பு எற்படுத்துவதாகவும் இங்கு பேசப்பட்டதாகவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளதுடன் கசப்புணர்வுகளை தவிர்கும் பொருட்டு அவர்களை மீள் அழைத்துக்கொள்வதற்கு எற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கின்றது.

பேசாலை, சவூத்பார், முல்லைத்தீவு, வாழைச்சேனை, மட்டக்களப்பு,  புடவைக்கட்டு, கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களில் தென்பகுதி மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலை செய்து வந்துள்ளனர் என்பதை இப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com