வறுமையின் கொடுமை: யாழில் தாயும் மகளும் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை
குடும்ப வறுமை காரணமாக இளம்பெண் ஒருவரும் அவரது பெண் குழந்தையும் கிணற்றில் வீழ்ந்து மரணித்துள்ள பரிதாப சம்பவம் நேற்று வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடவரணிப் பகுதியினைச் சேர்ந்த சர்மிலா சத்தியநாதன் (வயது 21) அவரது பெண் பிள்ளையான திலக்ஷிகா (வயது 6) ஆகியோரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.
மேற்படிப் பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய யுத்த நிலையின் போது காணாமற் போயுள்ளார்.
இதனையடுத்து அப் பெண்ணும் அவருடைய மகளும் உறவினர் ஒருவருடைய வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையிலேயே அவர்கள் நேற்று காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த இளம் தாயின் தற்கொலைக்கு வறுமையே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
0 comments :
Post a Comment