வணக்கம் வணக்கம் எப்படியிருக்கிறியள். உங்களுக்கென்ன குறைச்சல் இந்த கிழவனுக்கு தான் ஊர் சுற்றி சுற்றிக்கொஞ்சம் தலையிடி ஆனால் இப்ப பரவாயில்லை பாருங்கோ . வாசிப்பதால் மனிதன் பூரணமாகிறான் என்று பெரியவங்க சொல்லுவாங்க பாருங்கோ ஆனால் வாசிப்பதால் இந்த கூத்தமைப்பினர் மன்னிக்க வேண்டும் கூட்டமைப்பினர் என்று சொல்வதை விட இவங்களை கூத்தமைப்பினர் எண்டுறது தான் நல்லது. உந்த கூத்தமைப்பினர் செய்யும் வேலைகளை கண்டுபிடிச்சு நாலு பேருக்கு நானும் சொல்லக் கூடியதாக உள்ளது
.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உந்த செக்ஸ்சு பேப்பர் தினக்குரல்ல ஒரு செய்தியைப்படித்தேன் பாருங்கோ அதில் உந்த கூத்தமைப்பின்ர வசமுள்ள வல்வெட்டித்துறை நகர சபையினரால் வல்வெட்டித்துறையில் ஒரு நவீன வசதிகளுடன் ஒரு விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாக ஒரு செய்தியைப்படித்தேன் பர்ருங்கோ
அதில பாருங்கோ புலம்பெயர்ந்த உறவுகளின்ர பங்களிப்புடன் சுமார் 20 லட்சம் செலவில தான் உதை அமைக்கவுள்ளனர் என்று சொல்லியிருப்பதோடு ஒரு தனியார் விளையாட்டு மைதானமாக உள்ள ஒரு இடத்தை தான் பாருங்கோ அவர்கள் தெரிவு செய்திரு;ககினம் என்று செய்தியில போட்டிருந்தாங்க.
உண்மையிலேயே உந்த செய்தியைப்படித்த பலருக்கு அரசாங்கம் செய்யாட்டியும் உவங்கள் வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்தின்ர காசில எங்கட பெடி பெட்டையளுக்காக ஒரு மைதானத்தை அமைக்க போறாங்கனு சந்தோசப்பட்டிருங்குங்கள்.
ஆனால் பாருங்கோ உப்படி நினைக்கிறவங்களை நான் லூசுகள் எண்டு தான் சொல்லுறன் காரணத்தை நான் சொல்வதைக்கேட்டுட்டு சொல்லுங்கோ நான் சொல்வது சரியோ இல்ல பிழையோ எண்டு
ஆனால் பாருங்கோ உதில் எந்தளவு தில்லு முல்லு இருக்கென்கிற விஷயம் உங்களுக்கு தெரியாது. உந்த வல்வெட்டித்துறை நகர சபையின் ரென்டர் விஷயத்தில் முன்னர் ஊழல் மோசடி என்று ஈ,பி.டி.பி இணைத்தில செய்தி ஒண்டு இருக்கெண்டு என்ர பேரப்பிள்ளை ஒரு நாள் பார்த்திட்டு சொன்னான்.
உதைப்பற்றி அறிய வேண்டுமென்று நான் ஒரு நாள் உந்த நகர சபையில வேலைசெய்யுற ஒரு பெடியனிட்ட மெதுவா கேட்டேன் அவன் கூட பேசிக்கொண்டிருந்த போது அவன்; சொன்னார் பாருங்கோ அந்த ரெண்டர் விஷயத்தில் உண்மையாகவே ஊழல் நடந்திருக்கு என்று அடிச்சு சொன்னான் பாவி. நானும் நம்பல பாருங்கோ உந்த கூத்தமைப்பின்ர வாத்தியர் ஒருவர் தானே அங்க தலைவராக இருக்கிறார் என்றும் அந்தாள் நல்ல மனுஷன் என்று கேள்விப்பட்டனான் என்று சொன்னேன்.
அப்பதான் அந்த பெடியன் சொன்னான் பாருங்கோ ஒரு விஷயம் 'சடடடா அப்பவே எனக்கு லேசா கண்ணக்கட்டியது.ரெண்டர் கோல் பண்ணி எல்லா ரெண்டரும் தெரிவு செய்த பிறகு உந்த தலைவர் அனந்தராஜ் இருக்கார் தானே அவர் எல்லாத்திற்கும் முன்னர் ஒரு நகர சபையின் உறுப்பினர் ஒருவரை வைச்சு அவன் மூலமாக ஒரு கள்ளப்பெயரில் தானே ஒரு ரேண்டர் எடுத்து அதை அவனை வைச்சே இன்னொருத்தனுக்கு 2 லட்சத்திற்கு காசு வேண்டிக்கொண்டு கொடுத்திருக்கின்றார் பாருங்கோ. அந்த மடையனும் பாருங்கோ தான் லட்சம் காசுகளை வேண்டினான் எண்டு முத்திரையில் கையெப்பம் இட்டு கொடுத்திருக்கான்
அண்டைக்கு நகர சபையால கோரப்பட்ட எல்லா ரெண்டர்களும் ஒரு கிழமைக்கு பிறகு தான் பாருங்கோ செயற்படுத்தலுக்கு போயிருக்கு ஆனால் அந்த காசு வேண்டின ரெண்டர் மட்டும் அடுத்த நாளே நடவடிக்கைகளுக்கு போயிருக்கு.
அதுக்கு தலைவர் கையெப்பம் இட்டிருக்கார் என்றால் அவருக்கு தொடர்பில்லையென்று உவங்கள் சொல்வதில என்ன நியாயம் இருக்கு அத்தோட அது அவருக்கு தெரியாமல் நடக்கவும் வாய்ப்பில்லை
உந்த செய்தி வெளியே வந்ததும் அந்த உறுப்பினரை மாட்டி விட்டு உவன் பாவி மாஸ்டர் தப்பிவிட்டான் பாருங்கோ அதுவும் இளனி குடிக்கிறது யாரோ கோம்பை சுப்பினவன் அம்பிட்ட கதையாப்போச்சு உந்த லட்சணத்தில உவன் பாவி 20 லட்சம் ரூபா காசை வெளிநாட்டில இருக்கிறவங்களிட்ட வேண்டி மைதானம் அமைக்கப்போறானாம் ம்ம்மம அதுவும் நல்ல கதை தான் எத்தனை லட்சங்களை தன்ர வீட்டுக்கு கொண்டு போகப்போறானே தெரியலப்பா..
உதிலையும் ஒரு சுத்து மாத்து இருக்கிறது இப்பவே லேசா தெரியுது பாருங்கோ உவங்கள் ஏன் வெளியாட்களின்ர மைதானத்தை தெரிவு செய்ய வேண்டும். எனக்கென்னமே பாருங்கோ உது சரியா தெரியல உவன் குளிர்ல நிண்டு கஷ்ரப்பட்டு உழைக்கிற எங்கட சனத்தின்ர காசை நொகாமல் அடிக்கப்போறான் எண்டு தான் பாருங்கோ எனக்கு மனசில படுகுது..
சாதாரணமாக ரெண்டரிலேயே ரண்டு மூண்டு லட்சம் பார்க்க நினைக்கிறவங்க உதில் சும்மாவா இருப்பாங்க நான் உவங்களை நம்ப மாட்டேன் ஆனால் வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்திற்கு உதெல்லாம் தெரியாது தானே அதுகள் உவங்களை நம்பி காசு அனுப்ப கூடாது என்று தான் நான் உந்த சாமிகளையெல்லாம் வேண்டுறன். சரி பெடியள் நான் போட்டு வாறன் சாதுவா மழை வாறமாதிரி இருக்கு கையில குடையும் இல்லை பிறகென்ன அடுத்த முறை சந்திப்போம் என்ன அப்ப நான் போட்டு வாறேன்
அடப்பாவி பக்கத்திலை இருந்து பாத்தவன் மாதிரிக் கதைக்கிறாய். உங்களை மாதிரி கிழடுகள் இருக்குமட்டும் உலகென்ன ஊரே உருப்பட்ட மாதிரித்தான். இப்படிப்பட்ட பரதேசிப்பளசுகளுன்ரை வாயிலை பெற்றோலை ஊத்தாட்டீ வீடு கூட உருப்படாது நாடெப்படி
ReplyDelete