Saturday, February 18, 2012

அன்டனி பெர்னாண்டோவின் வீட்டிற்கு விஜயம் செய்து அஞ்சலி செலுத்தினார் ரணில்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சிலாபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கொல்லப்பட்ட அன்டனி பெர்னாண்டோவின் இல்லத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம்செய்து இறுதி மரியாதை செலுத்தினார்.

இதன்போது அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த பெர்னாண்டோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் உறவினர்களோடும் கலந்துரையாடினார்.

எதிர்க்கட்சித் தலைவருடன் கட்சி உறுப்பினர்களான பாலித்த ரங்க பண்டார மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் சென்றிருந்தனர். மீனவர் அன்டனி பெர்னாண்டோவின் பலியானமை தொடர்பிலான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

4 லட்சம் என்று குறிப்பட்ட ஒரு தொகை நட்டஈட்டை வழங்குவதன் மூலம் இதற்கான தீர்வுகள் கிடைத்து விடாது.நாட்டின் இளம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

உயிரிழந்த இளைஞர் அன்டனிக்கு முகம் கொடுத்த நேந்த அனர்த்தத்திற்கு அரசாங்கம் முழுமையாக பொறுப்பு கூறவேண்டும். இது தவறுதலான துப்பாக்கிப் பிரயோகத்தில் இடம்பெற்ற மரணம் அல்ல என்று ரணில் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அன்டனி பெர்னாண்டோவிற்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த அங்கு வருகைதந்த ஆளும் கட்சயை அமைச்சர்கள்மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலரை பிரதேச வாசிகள் அனுமதிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment