Saturday, February 11, 2012

மாலத்தீவில் அமைதி திரும்புகிறது

மாலத்தீவில், நீதிபதி கைதானதை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக, அதிபர் முகமது நஷீத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அங்கு பெரும் மோதல் வெடித்தது. போலீசார் நடத்திய அடிதடியில் முன்னாள் அதிபர் நஷீத் படுகாயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.

இதனையடுத்து, மாலத்தீவின் புதிய அதிபராக முகமது வாஹீத் பதவியேற்றார். துப்பாக்கி முனையில், தனது அதிபர் பதவி பறிக்கப்பட்டதாக நஷீத் பரபரப்பு தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில், அவரை கைது செய்ய அதிபர் வாஹூத் வாரண்ட் பிறப்பித்தார். இதனையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது.

தொடர் அரசியல் மாற்றங்களால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, தற்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது. விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற முன்னாள் அதிபர் நஷீத்தின் கோரிக்கையை, அதிபர் வாஷீத் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment