மகாபொல புலமைப் பரிசில் திட்டம் நிறுத்தப்படக்கூடிய சாதியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்திற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டொ மகாபொல புலமைப் பரிசிலை ஒருபோதும் அரசாங்கம் நிறுத்தப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
ஆவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், மகாபொல, ஒரு சுயாதீன நிறுவனமாகும். இதனால், மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கு, ஒருபோதும் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்க தேவையில்லை. பொதுவாக திரட்டப்படும் நிதியின் மூலமே, மகாபொல புலமைப் பரிசில் வழங்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சரான லலித் அத்துலத் முதலியினால், 1980 ஆம் ஆண்டு மகாபொல புலமைப் பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் போது முதல் தடவையாக 422 பேருக்கு, புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 10 ஆயிரத்து 300 பேருக்கு, இப்புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், புலமைப் பரிசிலுக்கான தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment