சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் எரிபொருள் அதிகரிக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.யின் மாற்றுக் குழுவின் நீர்கொழும்மபு பிரிவினர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நீர்கொழும்பு நகர மத்தியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இதன் போது அவர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஒரு மணித்தியாலமாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
No comments:
Post a Comment