வேகமாக அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் படும்பாட்டை பார்க்கும்போது, இந்த அரசாங்கம் தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்யும் போலத் தெரியவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை செயற்படுத்துவதில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியது. ஆனால் மக்களின் துன்பத்தை கருதும்போது இந்த அரசாங்கம் தொடர்ந்து பதவியிலிருக்க கட்சி ஆதரவு வழங்காது என ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
வரிகள், விலை அதிகரிப்பு, மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் என நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களை கொல்லும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது கடினம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment