ஜனாதிபதியின் பணிப்பில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நிரந்த பொலிஸ் பிரிவு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சாவகச்சேரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வைத்தியசாலையின் பிரதம வைத்தியரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்தே இப்பொலிஸ் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் கீழ் 24 மணிநேரமும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இங்கு கடமையாற்றுவற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக யாழ்.மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொலிஸ் பிரிவு உள்ள ஒரே ஒரு வைத்தியசாலையாக இதுவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment