யால வனவிலங்கு தேசியப் பூங்காவில் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் மனைவி சசி வீரவன்ஸ இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்ஸவின் மனைவி அடங்கிய ஒரு குழுவினர் இன்று அம்பாந்தோட்டையிலுளள யால வனவிலங்கு தேசிய பூங்காவில் கெபிலித்த விகாரையில் வழிபடுவதற்காக யாத்திரை சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற வாகனம் சேற்றுக்குள் சிக்கியது. இதனால் அவர்கள் திரும்பும் வழியை கண்டுபிடிக்க முடியாமல் கஸ்டப்பட்டுள்ளனர்.
இவர்களை கண்டுபிடிக்க மூன்று பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
No comments:
Post a Comment