வடபகுதியிலுள்ள மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் மரபுரிமை ஆய்வு மையம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக தொல்லியற் துறைப்பட்டதாரிகளும் யாழ்.கோட்டை புனர் நிர்மாணப்பணிகளில் ஈடுப்பட்டு உத்தியோகஸ்தர்களும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
வடபகுதியிலுள்ள மரபுரிமைச் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவரையில் எந்தவிதமான அமைப்புக்களும் இல்லையென்று பலராலும் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கோட்டை புனரமைப்பு நிலையத்திட்டப்;பணிப்பாளர் ஆர்.எம்.பி ரத்ணநயக்கா யாழ்.பல்கலைகழக வரலாற்றுத்துறைப்பேராசியர் வி.புஸ்பரட்ணம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைத்தனர்.
மரபுரிமைச் சொத்துக்கள் தொடர்பில் மக்களிடம் விழப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வமைப்பினர் தாம் என்னென்ன? நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் மரபுச்சின்னங்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment