சம்பள உயர்வுக்காக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கால வரையறையற்ற பகீஸ்கரிப்பு
நாடளாவிய ரீதியில் சம்பள உயர்வை வலியுறுத்தி அனைத்துப்பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் கால வரையறையற்ற பகீஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது சம்பள உயர்வை வலிறுத்தி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நாடாளாவிய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சார ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுவதோடு இப்போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்வி சார ஊழியர்களும் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது சம்பள உயர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment