Friday, February 17, 2012

கனேடிய பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

கிழக்கு மகாணத்தின் அம்பாரை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த கனேடிய பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் மற்றும் பொருளாதார நிபுணருமான மேகன் போஸ்டர் யுத்தத்தின் பின்னரான மக்களின் வாழ்வாதாரம், அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றினை மேற்கொள்வதற்காக அம்பாரை மாவட்டத்திலுள்ள பொதுஸ்தாபனங்களின் தலைவர்களை சந்தித்து ஆய்வினை மேற்கொண்டார்.

இது தொடர்பாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கனேடிய பிரதி உயர்ஸ்தானிகர் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் விரிவுரையாளர்களை சந்தித்து கலந்துரையாடலும் நடைபெற்றது.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமில் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(யு.கே.காலித்தீன்)






No comments:

Post a Comment