Thursday, February 23, 2012

சிலாபம் சம்பவத்தை படுகொலை என ஏற்று நஷ்ட ஈடு வழங்கிடுவீர். ஐ.தே.க

சிலாபம் சம்பவத்தை ஒரு படுகொலையாக ஏற்றுக்கொண்டு குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசை வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில்
 சிலாபம் என்டனி பெர்னாண்டோவின் படுகொலைக்கான பொறுப்பை, பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை ஊடகங்கள் அறிவித்துள்ளன. உத்தரவு வழங்கிய பிரதி பொலிஸ் அத்தியட்சகரும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரும், கைது செய்யப்பட வேண்டும். இதற்கான நட்டஈடாக 5 லட்சம் ரூபாவை உடனடியாக வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, துப்பாக்கி சூட்டுக்கான பொறுப்பை, பொலிஸார் ஏற்றுள்ள போது, அந்த பொலிஸாருக்கு எதிராக, அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும்? இதனை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும். பாதுகாப்பு செயலாளர், ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதில்லையென கூறும்போது, அவ்வாறு உத்தரவு வழங்காத நிலையில், பொலிஸார் கண்மூடித்தனமாக செயற்பட்டுள்ளார்கள். இந்த உயிரை அவர்கள் பலியெடுத்துள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார் .

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com