பான் கீ மூனிடம் இஸ்ரேல் புகார் ஈரானின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டியுங்கள்
இஸ்ரேலுக்கான ஐ.நா.சபையின் நிரந்தர பிரதிநிதி ரோன் புரோசர், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் ஈரான் மீது குற்றம் சாடியுள்ளார். ``இந்தியாவில் எங்கள் தூதரக அதிகாரி காரில் நடந்த குண்டு வெடிப்புபோல், லெபனான், தாய்லாந்து, பல்கேரியா, ஜியார்ஜியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளிலும் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஈரானும், அதன் ஆதரவு பெற்ற ஹெஜ்புல்லா தீவிரவாத இயக்கமும்தான் காரணம்.
ஈரானியர்களின் கைரேகை ஆதாரமாக கிடைத்து உள்ளன. ஈரானின் நடவடிக்கைகளால் பல நாடுகளுக்கு, அந்த நாட்டு அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி, திபிலிசி, பாங்காக் நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புக்காக ஈரானை ஐ.நா. பாதுகாப்பு சபை உடனடியாக கண்டிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேநேரம் டெல்லியில் இஸ்ரேல் நாட்டு பெண் தூதர் டால் எஹோஷூவா கோரேன் காரில் சென்ற போது கடந்த 13-ந் தேதி காந்த வெடி குண்டால் தாக்கப்பட்டார். இதில் அவர் கல்லீரல் மற்றும் முதுகு தண்டு எலும்பு ஆகியவற்றில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. இந்த நிலையில் இன்று மாலை அவர் விமானத்தில் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment