ஈரான் அணு உற்பத்தியை பெருக்குவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியா, தாய்லாந்தில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களில் குண்டு வெடித்தன. இதற்கு ஈரான் தீவிரவாதி கள்தான் காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் அமெரிக்கா தனது 2-வது போர்க் கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக் கும் வகையில் ஈரான் தனது 2 போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தியுள்ளது. அவை சூயஸ் கால்வாயை கடந்து சென்றன. இந்த தகவலை ஈரான் கப்பற்படை கமாண்டர் அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment