Thursday, February 16, 2012

இடமாற்ற சபையின்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற பெண் ஆசிரியர்- மாணவர்கள் கல்வி பாதிப்பு

கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயத்தின் கணித ஆசிரியராகக் கடமையாற்றிய பெண் ஆசிரியர் ஒருவர் இடமாற்ற சபையில்லாமல் செல்வாக்கில் இடமாற்றம் பெற்றுச் செல்லப்பட்டதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2010ம் ஆண்டில் இறுதியில் குறித்த பாடசாலைக்கு முதன் முதலாக ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்ற இவ்வாசிரியர் 2011ம் ஆண்டிலேயே தனது செவ்வாக்கை பயன்படுத்தி கிளிநொச்சி சென்.திரேசா பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றார்.

ஆகியினும் இவர் இடமாற்ற சபையின்றி தனது சுய செல்வாக்கினால் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் வடமாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து இவரது இடமாற்றம் உடனயாக இரத்துச் செய்யப்பட்டது.

இந்நிலையில்; கடந்த வருடத்தைப் போலவே இம்முறையும் இவ்வாசிரியர் தனது செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச்சென்றுவிட்டார். இந்த வருடத்திற்கான இடமாற்றங்கள் யாவும் மார்ச் மாதத்திலிருந்தே அமுலுக்கு வருகின்றன.

ஆயினும் இவர் கடந்த ஜனவரி மாதமே கிளிநொச்சி சென்.திரேசா பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்சென்று விட்டார். இந்நிலையில் இவரது இடத்திற்கு இன்னமும் புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படாததால் ஜெயபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் கடுமையாகப்பாதிக்;கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய பருத்தித்துறையைச் சேர்ந்த இவ்வாசிரியர் முன்னர் கிராமபுறப்பாடசாலையென்றிலேயே கடமையாற்றியிருந்ததோடு தற்போது கிளிநொச்சி நகர்புற பாடசாலை ஒன்றிற்கே இடமாற்றம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவரது தான்தோன்றித்தனமாக இச்செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய ஆசிரியர்களையும் கடுப்படையச் செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com