Friday, February 17, 2012

ராஜீவ் காந்தி கொலை பிரபாகரனுக்கு தெரியாமல் சி.ஐ.ஏ. செய்த சதி: விமல் வீரவன்ஸ

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகவராகமான சி.ஐ.ஏ. இருப்பதாக நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், அந்த இயக்கத்தையே அழிக்கச்செய்யக்கூடிய இத்தகையதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்லவென அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார்.

'இது தென்னிந்தியாவிலுள்ள எல்.ரி.ரி.ரி. அங்கத்தவர்கள் ஒரு பகுதியினருக்கு பிரபாகரனுக்குத் தெரியாமல் அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஒப்பந்தம் என நான் எண்ணுகிறேன்.

இதற்கு காரணம் இந்தியாவை ராஜீவ் காந்தி ஆளும்வரை இந்தியாவையும் தெற்காசியாவையும் அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியாதென்பதாகும்.

அவர்களுக்கு, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்று இனவாதமான, பலவீனமான தாம் கட்டுப்படுத்தக்கூடிய தலைவர் இந்தியாவில் நிர்வாகத்திற்கு தலைமை தாங்க வேண்டுமென விரும்பினார்கள்' என அவர் கூறினார்.

சி.ஐ.ஏ.யானது உலகின் எந்வொரு பகுதியிலும் தமக்கு இணங்கி நடக்காத தலைவர்களை அகற்றுவதற்கு தயங்கியதில்லை எனவும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com