எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்
விலைத்திருத்தத்தின் ஊடாக பொது
போக்குவரத்து துறைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படதாது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை, தனியார் போக்குவரத்து பஸ் சேவை, கடற்றொழிலாளர்கள், பாடசாலை போக்குவரத்து சேவை மற்றும் முச்சக்கர வண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் நிவாரணமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment