Friday, February 24, 2012

பிறநாடுகளின் கருப்புப் பணத்தை எற்பதில்லை: சுவிஸ் அரசு முடிவு

இனிவரும் காலங்களில் பிற நாட்டு மக்கள், சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்தும்போது, அவர்களது வருமானவரி கட்டுப்பாடுகள் குறித்து நன்கு விசாரிக்க வேண்டும் என்றும், வருமானவரி கணக்கு காட்டாமல் வரும் கருப்பு பணத்தை இனி ஏற்கக்கூடாது என்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் கொள்கைகளை தயாரிக்கும் உயர்மட்ட அமைப்பு முடிவெடுத்துள்ளது.

ரகசியங்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த வங்கிகளில் சுவிஸ் வங்கி முதலிடம் பெற்றுள்ளதாலும், இந்த வங்கியில் வரி குறித்த தகவல்கள் ஏதும் கேட்கப்படுவதில்லை என்பதாலும் பிற நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்களை இதுவே ஈர்த்துள்ளது.

மேலும், சில தினங்களுக்கு முன் சிபிஐ அதிகாரி ஒருவர் சுவிஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தின் மதிப்பை எண்ணிக்கையில் கூறியிருந்தார். இந்த தகவல் ஆதாரமற்றவை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment