அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவரை குற்றவாளி என அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அவன் கைது
செய்யப்பட்டான். அவனிடமிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த 22 வயதான உலக்பெக் கோடிரோவ் என்றும், அவன் பயங்கரவாத செயல்களுக்கு உதவி புரிந்தது. அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஆயுதங்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்தது தொடர்பான வழக்குகள் அவன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment