எல்ரிரிஈ தடையை நீடிக்கும் இந்தியாவின் மத்திய அரசாங்க தீர்மானத்திற்கு தமிழக மாநில அராங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வை.கோ எல்ரிரிஈ மீதான தடையை நீக்குமாறு தமிழக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவை வாபஸ் வேண்டும் என தமிழக மாநில அரசாங்கம் வைகோவை கேட்டுள்ளதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் எல்ரிரிஈ முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழகத்தில் அவ்வியக்கத்தின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்கள் எனும் போர்வையில் தமிழகத்திற்குள் நுழைந்து எல்ரிரிஈ இயக்கம் மீண்டும் பயங்கர செயற்பாடுகளில் ஈடுபடும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய பாதுகாப்பு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய எல்ரிரிஈ மீதான தடையை நீடிக்கும் இந்திய மத்திய அரசின் தீர்மானத்திற்கு தமிழக மாநில அரசாங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் த ஹிந்து நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment