எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக சிலாபம் கரையோரப் பகுதியில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் பகுதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்கு கண்ணீர்புகைப் பிரயோகமும் துப்பாக்கிப் பியோகமும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, அன்ரனி என்ற 38 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடுபட்டு மரணமாகியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டதாகவும், இதனால் அவர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment