Thursday, February 16, 2012

யாழ்.மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நம்புகின்றனரா? யாழ்.வந்த ஜேர்மன் தூதுவர் கேள்வி


யாழ்ப்பாண அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நம்புகின்றார்களா? என யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்த ஜேர்மன் விசேட தூதுவர் சில்லி நூன் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் கேள்வியெழுப்பினார்.

ஒரு நாள் விசேட பயணமாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேம்ஸ் புளெட்டினர் மற்றும் ஜேர்மன் விசேட தூதுவர் சில்லி நூன் ஆகியோர் இன்றைய தினம் யாழ்.விஜயம் செய்தனர்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விமானம் மூலம் வருகை தந்த இவர்கள் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதியையும் யாழ்.அரச அதிபரையும் சந்தித்துக்கலந்துரையாடினார்கள.

இச்சந்திப்பில் யாழ்.மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக யாழ்.அரச அதிபரிடம் கேட்டு அறிந்தனர்.

மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்;வு ஒன்றைப்பெற்றுக்கொள்ளவதற்காக தமிழ் மக்கள் எந்தளவு ஆர்வமாக உள்ளனர் என்றும் இவர்கள் அரச அதிபரிடம் கேட்டு அறிந்தனர்.

இதேவேளை இவர்கள் இன்றைய தினம் மதியம் யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்துக்கலந்துரையாடினார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment