2000ம் ஆண்டில் இடம்பெற்ற யுத்தினால் முற்றாகச் சேதமடைந்த பளை மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் இக்கட்டிடம் அமைக்கும் பணிகளை ஒப்பந்த நிறுவனம் ஆரம்பித்து மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இவ்வைத்தியசாலையானது ஏ9 வீதியினை அண்டிய பகுதியிலேயே முதற்கட்டமாக 46.2மில்லியன் ரூபா செலவில் நிர்வாக அலகு நிர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
2000ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்ததின்போது இவ்வைத்தியசாலையின் வைத்தியர் விடுதிகள் வெளிநோயாளர் விடுதிகள் பிரச விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் முற்றாக தரை மட்டமாக இடித்து தள்ளப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment