Monday, February 20, 2012

வெல்லாவெளியில் முஸ்லிம் வியாபாரி கொலை சந்தேக நபர் கைது. இருவரை தேடி வலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலவத்தையில் கடலமாக மீட்டக்பபட்டவரின் மரணம் தொடர்பிலான சந்தேகத்தில் ஆனைகட்டியவெளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கல்முனைக்குடியில் இருந்து வெல்லாவெளி பிரதேசத்துக்கு மாடு வாங்க வந்தபோது சடலமாக மீட்கப்பட்ட முஸ்லிம் வியாபாரியின் கொலை தொடர்பிலேயே அவரை வெல்லாவெளிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதே நேரம் மேலும் இருவரைத் தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அண்மையில் வெல்லாவெளி பிரதேசத்தின் மூங்கிலாறு பகுதியில்  இச்சடலம்  வெல்லாவெளிப் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
 
இது தொடர்பிலான விசாரணையை வெள்ளாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment