Wednesday, February 15, 2012

"டென்ட்ரோபியம் மஹிந்த-ஷிரந்தி" என பெயர் மாற்றப்பட்ட மலர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவும், சிங்கப்பூருக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, விசேட ஓகிட் வகைக்கு, அவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கமைய அந்த விசேட வகையான ஓகிட் மலருக்கு,  "டென்ட்ரோபியம் மஹிந்த-ஷிரந்தி" என பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை சிங்கப்பூரின் தேசிய பூங்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கும், அவரது பாரியாருக்கும் இந்த விசேட ஓகிட் செடியை, சிங்கப்பூர் தேசிய பூங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பூன் ஹொங் கையளித்தார்.

இந்த விசேட ஓகிட் வகையை தயாரிப்பதற்கு, சுமார் 4 வருட காலங்கள் கழிந்துள்ளன. 105 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள இந்த தேசிய பூங்காவை, சிங்கப்பூருக்கு வருகை தரும் சகல அரச தலைவர்களும், பார்வையிடுவது, ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com