Sunday, February 5, 2012

நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ராஜதந்திரிகள் யாழ் நூலகத்திற்கு விஜயம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட ராஜதந்திரிகள் யாழ் நூல் நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்கள் யாழ் மேயர் மற்றும் மாகாண ஆழுநர் உட்பட்ட அரச பிரதிநிதிகளால் வரவேற்கப்பட்டனர். அங்கு கருத்து தெரிவித்த இராஜதந்திரிகள் புனர்வாழ்வு, புனர் நிர்மாணம், மீள் குடியேற்றம் ஆகிய அபிவிருத்தி செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மகிழ்ச்சியும், திருப்தியும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
கொலன்ட் நாட்டுத்தூதுவர் தெரிவிக்கையில் வடமாகாண அபிவிருத்தி வேலைகள் வியக்கத்தக்கதாக உள்ளது, அத்துடன் எமது அரசாங்கம் யாழ்ப்பாணக் கோட்டையின் அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றது,
இது சுற்றுலாத்துறைக்கு சாதகமாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளார்,

றுகண்டா நாட்டுத் தூதுவர் கூறுகையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மிக விரும்பத் தக்கதாகும். அரசாங்கம் மிகவும் சரியான வழியில் போய்க்கொண்டிருக்கின்றது, மக்களினுடைய கைகளில் அதிகாரங்கள் சென்றடைந்து பாதுகாப்பு, சமாதானம் அபிவிருத்தியில் ஈடுபட்டு இலங்கை வாழ்வதற்கு சிறந்த நடாடாக உருவாகவேண்டும் எனக்குறிப்பிட்டார்.







No comments:

Post a Comment