Friday, February 24, 2012

இராணுவத்தினரது சமூகச் சேவைகள் மேலும் தொடரும்- யாழில் பாதுகாப்புச் செயலர் உறுதி

யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினர் மக்களுக்கான சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். இராணுவத்தினரது இவ்வாறான சேவைகள் மேலும் தொடரும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளர்.

யாழ்.மகாஜனக்கல்லூரியில் 24 மில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினரால் இன்றையதினம் அமைத்துக்கொடுக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிடத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பொது மக்களுக்கான பாரிய சமூக நலத்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதை நான் கண்டுள்ளேன்.

இராணுவத்தினரது இவ்வாறான சமூகச்செயற்பாடுகள் மேலும் மேலும் தொடரவேண்டும். அது நிச்சயமாக தொடரும். அதனை அவர்கள் மேலும் தொடர்வார்கள் என நம்புகின்றேன்.

இக்கட்டிடத்தை அமைப்பதற்கு 24 மில்லியன் ரூபா பணம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இக்கட்டிடத்தின் பெறுமதி 35 மில்லியனுக்கும் மேல் உள்ளது.

இதனை இராணுவத்தினர் தமது மனித வலுவைப்பயன்படுத்தியே வடபகுதி மக்களுக்காக செய்து கொடுத்துள்ளனர். இதனை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு பதிலாக நீங்களும் ஒன்று செய்யவேண்டும் அது என்னவென்றால் நன்றாக கல்வி கற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் அதுவே நீங்கள் இராணுவத்தினருக்கு செய்யும் உபகாரமாகும்.

யுத்தத்தின் பின்னர் இன்று மகாஜனக்கல்லூரி நல்ல வளர்ச்சி கண்டு வருவதாக இங்கு பலர் என்னிடம் கூறியுள்ளனர். நாம் தொடர்ச்சியாக உங்கள் நலனில் அக்கறையுடனே செயற்படுகின்றோம் என்றார்.

1 comment:

  1. Welldone , keep it up, coz diaspora LTTEs r try to land there.

    ReplyDelete