உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் கணிசமாக குறைந்து வருகிறதை அவதானிக்க முடிகிறது என நீதிதுறை வட்டார ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் பிரகாரம் 2009 ஆம் வருடம் 1669 அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. 2010 ஆம் ஆண்டு இது 1010 ஆக குறைந்தது. கடந்த வருடம் 602 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன என அவ்வாய்வு மேலும் தெரிவிக்கின்றது.
இவ்வருடம் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மீறல் மனுக்கலில் பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கலே அதிகமாகும் எனவும் பொதுவாக அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் குறைந்திருப்பது நாட்டில் சட்டம் ஒழுங்கு உரிய வகையில் செயற்படுவதையே சுட்டிக்காட்டுவதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment