ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக நிறுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகின்றது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது எனவும், ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை ஆஜர் செய்ய முயற்சி எடுக்கப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது எனவும், இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதே அமெரிக்காவின் பிரதான இலக்கு என விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் விமல் வீரவன்ச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment