இலங்கையின் வடக்கில், உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில்,இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர் அதிகாரிகள் இது குறித்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள பாதுகாப்புச் செயலாளர், இலங்கையில் வடக்கில் போன்றே தெற்கிலும் இராணுவ முகாம்கள் இருப்பதாகவும் அவற்றை அகற்றுவது குறித்து தீர்மானிப்பது, அரச பாதுகாப்புச் சபையே என கூறியுள்ளார்.
அத்துடன் சுதந்திரமான நாடு என்ற வகையில், இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பில், தீர்மானங்களை எடுக்க இலங்கைக்கு சுதந்திரம் உள்ளதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என சர்வதேச நாடுகளும், தமிழ் கூட்டமைப்பு,ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மக்கள் போராட்ட அமைப்பு உள்ளிட்ட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment