அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தற்போது இடம் பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பேரணியாகச் செல்ல முற்பட்ட ஆர்பாட்டக்காரர்களை பொலிஸார் தடைகளை இட்டு மறித்துள்ளனர்.
எனினும் அதனை மீறிச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர் பீச்சியடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சில ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
கண்ணீர்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு உள்ளே பிரவேசித்துள்ளனர்.
இதேவேளை, சற்று முன்னர் கிடைத்த தகவல்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தலையில் அடிவிழுந்த அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment