Friday, February 17, 2012
ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ள யாழ்.இந்து மகளீர் கல்லூரி அதிபர்- ஆதாரங்கள் வெளியிடுவோம
நல்லார் கோட்டக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக மாணவர்களையும் கல்விச்சமூகத்தையும் ஏவிவிடும் பணியில் யாழ்.இந்து மகளீர் கல்லூரி அதிபர் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினாலும் பாடசாலையின் பழைய மாணவர்களாலும் அன்பளிப்பு செய்யப்பட்ட பல கோடி ரூபா பணத்தை பாடசாலை அதிபர் மோசடி செய்தது தொடர்பாக கல்வி திணைக்களத்திற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் அறிவித்ததைத் தொடர்ந்தே இவ்வாறான நடவடிக்கைகளில் அதிபர் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக இவர் மீது பாலியல் குற்றச்சாட்டையும் புலிபாசிச சாயத்தையும் பூசி இவரை மக்கள் தூரத்தியடிக்க வேண்டும் என்ற போலியான பிரசுரம் ஒனறும் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளைய தினம் நல்லூர் கோட்டத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளையும் பகீஸ்கரிப்பிற்கு இப்பிரசுரம் மூலம் அழைத்துள்ளதோடு மாணவர்களையும் பலவந்தாமாக அவர் பாடசாலைக்கு வரக்கூடாது என்று பணித்துள்ளார்.
இதேவேளை யாழ்.இந்து மகளீர் கல்லூரி அதிபர் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வடமாகாண ஆளுநருக்கும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவரது இந்நடவடிக்கைகள் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவரது இந்நடவடிக்கைகளுக்கு யாழ். வலயக்கல்வி பணிமனையும்ஆதரவு அளித்துள்ளது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தள்ளது.
அதிபரது இந்நடவடிக்கைகள் தொடருமானால் இவரது ஊழல் நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் இங்கு வெளியிடவும் நாம் தயங்கமாட்டோம். என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். எம்மிடம் சகல ஆதாரங்களும் உள்ளனவென்பதும் இங்கு மிகமுக்கியமானது.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநருக்கு பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வெளியிடப்பட்ட போலியான பிரசுரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment