கிரிக்கெட் துறையில் பிரபலமானவரும் சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளருமான ரணில் அபேநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்புக் காரணமாக தனது 57 ஆவது வயதில் காலமானார்.
ரணில் அபேநாயக்க கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.
கொழும்பு எஸ்.எஸ்.சி கழகத்தையும், இங்கிலாந்தின் பெட்பர்ட் செயர் கழகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் அபேநாயக்க, 1973 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டுவரையான 14 வருடங்கள் முதல் தர போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
கல்கிசை தென் தோமஸ் கல்லூரியின் மாணவனான இவர் கல்லூரியின் கிரிக்கெட் அணிக்கு எழுபதுகளின் நடுப்பகுதியில் கப்டனாக இருந்தார். பின்னர் இவர் சென் தோமஸ் கல்லூரியின் அணிக்கு பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றார்.
சிங்கள ஸ்போட்ஸ் கிளப்புக்காக விளையாடிய இவர் சிறிது காலம் பெட்போட்ஷயர் அணியிலும் இருந்தார்.
இவர் 'ஆடுகளம்' அமைப்பதிலும் வல்லவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment