Friday, February 10, 2012

புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க

மனித உரிமைகள் தொடர்பில் அதிகம் பேசும் அரசியல்வாதிகள் புலிகள் காலத்தில் மறுக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் தொடர்பில் ஏன் பேசுவதில்லை அவற்றை மறந்து விட்டார்களா? என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து-பௌத்த கலாச்சார பேரவையின் முதலாம் ஆண்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் ஏனைய பகுதிகளை விட வடக்கு மாகாணம் அபிவிருத்தியில் பின் நிற்பதை கண்டுள்ளேன். கிளிநொச்சி யாழ்ப்பாணம் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு நேரில் நானே சென்று இவற்றை அவதானித்துள்ளேன்.

இந்நிலை மாற்றப்படவேண்டும் இதற்கு தீயவழியில் யாரும் தீர்வு காணமுற்படக்கூடாது நல்ல முறையில் இதற்கு தீர்வு காண வேண்டும். இதற்காக அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது

இதற்கு இந்து பௌத்த சமயங்களுக்கிடையில் ஒரு ஒற்றுமை ஒருமைப்பாடு காணப்படுவதன் மூலம் அபிவிருத்தி என்னும் இலக்கை நோக்கி நாம் செல்ல முடியும்.

புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இப்போதைய அரசியல்வாதிகள் ஏன் பேசுவதில்லை.

அவற்றை மறந்து விட்டார்களா? புலிகளின் காலத்தில் கல்வி உட்பட சகல உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்ததாகவும் இப்பேர்து அவை பூரணமாக தமிழ் மக்களுக்கும் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comments :

ARYA ,  October 12, 2012 at 3:28 AM  

கச்சதீவையும் மற்றைய தீவு பகுதிகளையும் சீனாவுக்கு கடற்ப்படை தளம் அமைக்க கொடுத்து விட்டால் கிருஷ்ணா இப்படி கதைக்க முடியுமா ? சீனாவுக்கு முற்று முழுதான உரிமையை வழங்கி , இலங்கையை ஒரு சிங்கப்பூர் , ஹொங்கொங் , தைவான் போல ஒரு நவீன தேசமாக உருவாக்க வேண்டும், இந்தியாவை உள்ள விட்டால் இலங்கை Toilet நாடு (தமிழ் நாடு) போல மிக விரைவில் ஆகிவிடும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com