முதலாம் இராணுவ நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ரஞ்சித் டி சில்வா மற்றும் நலின் பெரேரா ஆகிய நீதிபதிகள் மனுவை ஒத்திவைத்துள்ளனர்.
முதலாம் இராணுவ நீதிமன்றிற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த தீர்ப்பின் விடயங்கள் இந்த வழக்குடன் தொடர்புடையது என்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.
அதன்படி வழக்கு எதிர்வரும் மே மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இராணுவ நீதிமன்றிற்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானதென அறிவிக்கும்படி கோரி சரத் பொன்சேகா மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment