யாழ் விஜயம் செய்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்துள்ளதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு கொண்டுள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்த இவர் இன்று காலை யாழ்.பொது நூலகத்தில் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட யாழ்ப்பாணப்புகைப்படக் கண்காட்சியை சம்பிதாய பூர்வமாக நடாவெட்டி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து தெல்லிப்பளை மகாஜனக்கல்லூரியில் பாதுகாப்பு அமைச்சின் நண்பர் தேசமான்ய பாலேந்திராவின் நிதியுதவியுடன் கட்டிக்கொடுக்கப்பட்ட மூன்று மாடிகளைக்கொண்ட கட்டிடத்தொகுதியை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் புலி உறுப்பினர்களை ஊர்காவற்றுறையில் சந்தித்துக்கலந்துரையாடியதோடு அவர்களும் இராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளும் நன்னீர் நண்டு வளர்ப்பு திட்டத்தையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில் இராணுவத்தளபதி லெ.ஜெனரல். ஜகத்ஜெயசூரிய யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே உள்ளிட்ட இராணுவ உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment